Monday, November 23, 2026
spot_img
HomeBusinessநஜிப் ரசாக் இன்று முதல் வீட்டுக்காவலில்! காஜாங் சிறையிலிருந்து இல்லத்திற்கு மாற்றம்

நஜிப் ரசாக் இன்று முதல் வீட்டுக்காவலில்! காஜாங் சிறையிலிருந்து இல்லத்திற்கு மாற்றம்

முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக், இன்று முதல் காஜாங் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு, கோலாலம்பூரில் உள்ள தாமான் டூத்தாவில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு மாற்றப்படுகிறார்.

எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் நிறுவனத்தின் நிதியைத் தவறாகப் பயன்படுத்திய வழக்கில் விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையின் எஞ்சிய காலத்தை வீட்டுக்காவலில் கழிப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

கடந்த நவம்பர் 6ஆம் தேதி உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ அஸ்லாம் ஜைனுடின் பிறப்பித்த உத்தரவின்படி, 50 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்திய பின்னர் விடுதலை செய்வது தொடர்பான முந்தைய உத்தரவு ரத்து செய்யப்பட்டது. அதற்குப் பதிலாக, நஜிப் தனது சிறைத்தண்டனையின் எஞ்சிய காலத்தை வீட்டுக்காவலில் அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அபராதத் தொகையைச் செலுத்திய பின்னர் விடுதலை உத்தரவு பிறப்பிக்கக் கோரி தலைமை வழக்கறிஞர் அலுவலகம் (AGC) தாக்கல் செய்த மனு தொடர்பாக, நஜிப்பின் வழக்கறிஞர்கள் மற்றும் அரசுத் தரப்பு முன்வைத்த வாதங்களைக் கேட்டறிந்த பின்னரே நீதிபதி இந்த முடிவை அறிவித்தார்.

இதன்படி, நஜிப் தனது தண்டனையின் எஞ்சிய காலத்தை 2028ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி வரை வீட்டுக்காவலில் கழிக்கவுள்ளார்.

சிறையிலிருந்து வீட்டுக்காவலுக்கு மாறும் நஜிப் ரசாக்கின் இந்த நடவடிக்கை மலேசிய அரசியல் வட்டாரத்தில் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.

RELATED ARTICLES

Most Popular