
கோலாலம்பூர், 30 நவம்பர் 2025 — பிரிமியர் லீக்கின் அதிகாரப்பூர்வ பீர் பிராண்டான கின்னஸ் மலேசியா, கோலாலம்பூரில் கால்பந்து கருப்பொருளில் வடிவமைக்கப்பட்ட தனித்துவமான தங்கும் வசதி ‘கின்னஸ் க்ளப்ஹவுஸ்’-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
இன்று முதல் 2026 பிப்ரவரி மாத இறுதி வரை, தகுதி பெற்ற விருந்தினர்கள் இலவசமாக இரவு தங்கும் அனுபவத்தை முன்பதிவு செய்யலாம்.

மூன்று தளங்களில் அமைந்துள்ள இந்த க்ளப்ஹவுஸ், கால்பந்து சூழலும் கின்னஸ் பிராண்டின் அழகும் ஒரே இடத்தில் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது.
தீவிர ரசிகர்களிலிருந்து நண்பர்களுடன் பொழுதுபோக்க விரும்புவோர்வரை, போட்டி இரவின் உற்சாகத்தை உணர்த்தும் வகையில் பல்வேறு செயல்பாடுகள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. விருந்தினர்கள் நேரடி பிரிமியர் லீக் போட்டிகளை மிகப் பெரிய புரோஜெக்டர் மற்றும் சத்தத்துடன் காணலாம். சமையலறை மற்றும் பண்ரியில் கின்னஸ் தொனியில் தயாரிக்கப்பட்ட திண்பட்டங்கள் மற்றும் போட்டி இரவு தேவைகள் வழங்கப்படுகின்றன. மேல் தளத்தில் புஸ்பால், டேபிள் புட்பால் மற்றும் பூல் டேபிள் வசதியும் உண்டு. மேலும், கின்னஸ் மற்றும் கால்பந்து பிராண்டிங் கொண்ட படுக்கையறைகள் அதிகபட்சம் 20 விருந்தினர்களை தங்கும் வசதியும் இருக்கிறது.

கின்னஸ் மலேசியாவின் மார்க்கெட்டிங் அதிகாரி ஜாய்ஸ் லிம் கூறியதாவது: “போட்டி இரவுகள் என்பது விளையாட்டை மட்டுமே குறிக்காது மக்கள், நகைச்சுவை, மற்றும் ஒரு கின்னஸ் பைண்ட் ஆகியவை ரசிகர்களை ஒன்றிணைக்கின்றன. பல்வேறு ரசிகர்களை ஒன்றாகக் கொண்டு வருவதற்காகவே இந்த க்ளப்ஹவுஸை உருவாக்கியுள்ளோம்.”

இந்த அனுபவம் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு இரவுகளில் மட்டும் கிடைக்கும். 21 வயதுக்கும் மேற்பட்ட முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மட்டும் திறந்த இந்த தங்கும் அனுபவத்திற்கான இடங்கள் மிகவும் வரையறுக்கப்பட்டன. மேலும் தகவல்களுக்கு Instagram-இல் @GuinnessMY-யைப் பின்தொடரலாம் என்றார்.

கின்னஸ் க்ளப்ஹவுஸ் செயல்பாடுகள் மற்றும் பொருட்கள் ஏற்பாட்டாளர்கள் மற்றும் சொத்து உரிமையாளர் வகுக்கும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது. அனைத்து கின்னஸ் பிரமோஷன்களும் 21 வயதுக்கும் மேற்பட்ட முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மட்டுமே. பொறுப்புடன் நுகர்வதை கின்னஸ் மலேசியா நினைவூட்டுகிறது மற்றும் வாகனம் ஓட்டுவதற்கும் மதுபானம் அருந்துவதற்கும் எதிராக அறிவுறுத்துகிறது.


