Sunday, August 23, 2026
spot_img
HomeMusicமனதை வருட வரும் 'நான் பேசுறேன்; நீ கேளு' – மலேசியாவில் முதல் முறையாக தீபக்கின்...

மனதை வருட வரும் ‘நான் பேசுறேன்; நீ கேளு’ – மலேசியாவில் முதல் முறையாக தீபக்கின் Soul Healing Concert

மனநலம் தொடர்பான கதைகள் மற்றும் உணர்வுபூர்வமான பதிவுகள் மூலம் ஆயிரக்கணக்கான மக்களின் மனதை தொட்ட சென்னை கதைசொல்லி தீபக், முதல் முறையாக மலேசியாவில் தனது “நான் பேசுறேன்; நீ கேளு” (Nan Pesuren; Ne Kelu) என்ற Soul Healing Concert-ஐ நடத்தவுள்ளார்.

இந்த நிகழ்ச்சி ஒரு சாதாரண இசை நிகழ்ச்சி அல்ல. இசை, கதைசொல்லல், வாழ்க்கை அனுபவங்கள் மற்றும் உணர்வுகளை ஒன்றாக இணைத்து, பார்வையாளர்களின் மனதை நேரடியாக தொடும் ஒரு மணி நேர சிறப்பு அனுபவமாக இது அமையவுள்ளது.

சிரிக்க வைக்கும் தருணங்களும், அமைதியாக சிந்திக்க வைக்கும் தருணங்களும், மனதை உருக்கும் உணர்வுகளும், வாழ்க்கையை புதிதாக பார்க்க வைக்கும் கதைகளும் இந்த நிகழ்ச்சியில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மனதில் சொல்ல முடியாமல் இருக்கும் பல உணர்வுகளுக்கு குரல் கொடுக்கும் முயற்சியாக இந்த Soul Healing Concert அமையும் என்றும் கூறப்படுகிறது.

மனநல விழிப்புணர்வை வித்தியாசமான முறையில் மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி, கலை, இசை மற்றும் உணர்வுகளின் அழகான சங்கமமாக இருக்கும். மேடையில் பகிரப்படும் ஒவ்வொரு கதையும், பார்வையாளர்களின் மனதில் நீண்ட நேரம் நிற்கும் அனுபவத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சி Chennaisixtyeight-இன் மலேசியாவின் முதல் அத்தியாயமாக நடைபெறுகிறது. MOJO Projectsஏற்பாடு செய்யும் இந்த சிறப்பு நிகழ்ச்சிக்கான இருக்கைகள் குறைவாக இருப்பதால், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் விரைந்து முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மனதைத் தொடும் இந்த வித்தியாசமான அனுபவத்தை ரசிக்க விரும்புபவர்கள், Excitix இணையதளம் மூலம் தங்களது டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். இசையைத் தாண்டி, மனதோடு பேசும் ஒரு நிகழ்வாக “நான் பேசுறேன்; நீ கேளு” மலேசிய ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES

Most Popular