Monday, August 24, 2026
spot_img
HomeUncategorized118 Mall-ல் புதிய Shopping அனுபவத்திற்கு தயாராகுங்கள்!

118 Mall-ல் புதிய Shopping அனுபவத்திற்கு தயாராகுங்கள்!

200-க்கும் மேற்பட்ட Retail Partners ஒன்று கூடிய பிரமாண்ட சந்திப்பு

கோலாலம்பூரின் அடுத்த முக்கிய shopping மற்றும் lifestyle destination ஆக உருவாகி வரும் 118 Mall, தனது முதலாவது Retailers’ Get-Together நிகழ்வை பிரமாண்டமாக நடத்தியது.

பார்க் ஹயாட் கோலாலம்பூரில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 200-க்கும் மேற்பட்ட retail partners கலந்துகொண்டு, எதிர்காலத்தில் 118 Mall வழங்கவுள்ள shopping, dining, fashion, entertainment மற்றும் lifestyle அனுபவங்கள் குறித்து கலந்துரையாடினர்.

Village Grocer, Makanism Foodhall, adidas, ALDO, Converse, Foot Locker, Guess, Lacoste, Benjamin Barkerஉள்ளிட்ட முன்னணி பிராண்டுகள் 118 Mall-ன் retail mix-ஐ மேலும் வலுப்படுத்துகின்றன.

உணவு பிரியர்களுக்காக CHAGEE Signature, Honolu Ramen, Masala Mansion, Donkai, Nara Thai உள்ளிட்ட பல்வேறு F&B brands-களும் இடம்பெறவுள்ளன.

அதேபோல், குடும்பங்கள் மற்றும் அன்றாட வாழ்க்கைமுறைக்கான Babyshop, Best Denki, BookXcess, Happikiddoஉள்ளிட்ட பிராண்டுகளும், Maybank Premier Banking சேவையும் இணைகின்றன.

மலேசியாவின் Local Brands-க்கும் முக்கிய இடம்

மலேசியாவின் கலை, கலாசாரம் மற்றும் தொழில்முனைவோரை முன்னிறுத்தும் Malaysian Artisan District (M.A.D)-இன் கீழ் Banglo 289, Batik Boutique, Bayu Somerset, Cookiecrumbs உள்ளிட்ட உள்ளூர் பிராண்டுகளும் 118 Mall-ல் இடம்பெறவுள்ளன.

Shopping-ஐ தாண்டிய புதிய அனுபவம்

PNB Merdeka Ventures Sdn. Bhd. நிறுவனத்தின் CEO Dato’ Ir. Ts. (Dr) Izwan Ibrahim, 118 Mall என்பது வெறும் shopping destination அல்ல என்றும், retail, hospitality, heritage, tourism மற்றும் culture ஆகியவற்றை ஒன்றிணைக்கும் Merdeka 118 ecosystem-ன் முக்கிய அங்கமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

118 Mall-ன் Retail தலைவர் Sue Wang, உணவு, fashion, design, art மற்றும் culture மூலம் பல்வேறு அனுபவங்களை ஒரே கூரையின் கீழ் வழங்குவதே 118 Mall-ன் தனிச்சிறப்பு எனக் குறிப்பிட்டார்.

முதல் ஆண்டில் 22 மில்லியன் பார்வையாளர்கள் இலக்கு!

118 Mall தனது முதல் ஆண்டில் 22 மில்லியன் வரையிலான visitors-ஐ வரவேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Merdeka 118 வளாகத்தின் சுற்றுலா, hospitality மற்றும் வர்த்தகச் சூழலை பயன்படுத்தி, உள்ளூர் மக்களுடன் மட்டுமல்லாமல் tourists, luxury hotel guests மற்றும் corporate visitors ஆகியோரையும் ஈர்க்கும் வகையில் 118 Mall உருவாகி வருகிறது.

மேலும், Level 4-ல் அமைக்கப்படவுள்ள anamorphic screens மற்றும் பல்வேறு event spaces மூலம் retailers தங்களது brand activations மற்றும் immersive experiences-ஐ உருவாக்கும் வாய்ப்புகளும் வழங்கப்படவுள்ளன.

Shopping மட்டும் இல்லாமல்… Food, Fashion, Culture, Art, Entertainment என அனைத்தையும் ஒரே இடத்தில் அனுபவிக்கக்கூடிய புதிய destination-ஆக 118 Mall உருவாகிறது! 

RELATED ARTICLES

Most Popular