
மொபைல் டிக்கெட் முன்பதிவு செயலியில் அதிக எண்ணிக்கையிலான பயனர் இடைமுக மொழிகளை வழங்கியதற்காக, கிரேட் டிக்கெட் (Great Ticket) நிறுவனம் மலேசிய சாதனைப் புத்தகத்தில் (Malaysia Book of Records) அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவின் தொழில்நுட்ப வளர்ச்சியையும், டிஜிட்டல் புத்தாக்கத் திறனையும் பறைசாற்றும் வகையில் இந்தச் சாதனை அமைந்துள்ளது.
மொபைல் டிக்கெட் செயலியில் பல்வேறு மொழிகளில் பயனர்கள் சேவைகளைப் பயன்படுத்துவதற்கு வழிவகுக்கும் இந்த முயற்சி, மொழி வேறுபாடுகளைக் கடந்து டிஜிட்டல் சேவைகளை எளிதாக அணுகும் வாய்ப்பை மேம்படுத்துவதில் முக்கியத்துவம் பெறுகிறது.
“ஒவ்வொரு டிக்கெட் அனுபவத்தையும் சிறப்பானதாக மாற்றுவோம்” என்ற நோக்கத்துடன் செயல்படும் கிரேட் டிக்கெட், இந்த அங்கீகாரத்தின் மூலம் மலேசியாவின் சாதனையை உலகளவில் எடுத்துரைத்துள்ளது.
மலேசியாவுக்குப் பெருமை சேர்க்கும் இந்தச் சாதனை, தொழில்நுட்பத் துறையில் உள்ளூர் நிறுவனங்களின் வளர்ச்சிக்கும், உலகளாவிய இலக்குகளை நோக்கிய அவற்றின் பயணத்திற்கும் ஓர் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.


