Thursday, November 26, 2026
spot_img
HomeBusinessநேபாள வெள்ளம், நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு RM175,000 பெர்கேசோ நிதியுதவி!

நேபாள வெள்ளம், நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு RM175,000 பெர்கேசோ நிதியுதவி!

நேபாளம் – திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவும் வகையில், 16 குடும்பங்களுக்கு மொத்தம் RM175,000 நிதியுதவியை சமூகப் பாதுகாப்பு அமைப்பான பெர்கேசோ (PERKESO) வழங்கியுள்ளது.

இது தொடர்பாக டாக்டர் ராமணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதிக்கப்பட்ட 16 குடும்பங்களுக்கும் உடனடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், தகுதியுள்ள குடும்ப உறுப்பினர்களுக்கான விதவை மற்றும் வாரிசு ஓய்வூதியக் கொடுப்பனவுகளும் விரைவாகச் செயல்படுத்தப்படும் எனக் குறிப்பிட்டார்.

பெர்கேசோவில் பங்களிப்புப் பதிவுகள் இல்லாத உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் உரிய உதவிகளை வழங்குவதற்காக, KESUMA அமைச்சின் கீழ் செயல்படும் சமூக ஒத்துழைப்புத் திட்டத்தின் மூலம் மாற்று உதவிகள் அடையாளம் காணப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், வீட்டுப் பணியாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், அவர்களைப் பணியமர்த்தும் அனைவரும் முறையாகப் பதிவு செய்து பெர்கேசோவில் பங்களிப்புச் செலுத்துவது கட்டாயம் என்றும் வலியுறுத்தினார்.

இதற்கிடையில், விதிமுறைகளை மீறும் முதலாளிகளுக்கு எதிராகக் கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகளை வலுப்படுத்துமாறு பெர்கேசோவுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களின் தேவைகளைக் கவனித்து உதவி செய்த பெர்கேசோ பிரிஹாட்டின் குழுவினருக்கும் அவர் நன்றியைத் தெரிவித்தார்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டதுடன், இந்த உதவிகள் அவர்களின் துயரத்தையும் அன்றாட வாழ்க்கைச் சுமையையும் ஓரளவு குறைக்கட்டும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

RELATED ARTICLES

Most Popular