Sunday, April 5, 2026
Homeபாரம்பரியம் மற்றும் பொழுதுபோக்கைத் தழுவும்ஆஸ்ட்ரோவின் வசீகரிக்கும் பண்டிகைநிகழ்ச்சிகளுடன் பொங்கலைக் கொண்டாடுங்கள்

பாரம்பரியம் மற்றும் பொழுதுபோக்கைத் தழுவும்ஆஸ்ட்ரோவின் வசீகரிக்கும் பண்டிகைநிகழ்ச்சிகளுடன் பொங்கலைக் கொண்டாடுங்கள்

ரியாலிட்டி விளையாட்டு நிகழ்ச்சி முதல்திகில்-நகைச்சுவைத் தொலைக்காட்சித் தொடர் மற்றும் இசைநிகழ்ச்சி வரை ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாகத்தொலைக்காட்சி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகாஆகியவற்றில் கிடைக்கப்பெரும் துடிப்பான முதல் ஒளிபரப்புநிகழ்ச்சிகளுடன் ஆஸ்ட்ரோ பொங்கலைக் கொண்டாடுகிறது. GM Klang-இல் நடைப்பெறும் ஆஸ்ட்ரோவின் பொங்கல் கொண்டாட்டத்தில்கலந்துக் கொண்டு தங்களுக்குப் பிடித்த உள்ளூர் திறமையாளர்களைச்சந்திக்கும் வாய்ப்பைப் பெற அனைத்து மலேசியர்களும்அழைக்கப்படுகிறார்கள்.

 

ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாகத்தொலைக்காட்சி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகாஆகியவற்றில் உள்ளூர் பொங்கல் முதல் ஒளிபரப்பு நிகழ்ச்சிகளைவாடிக்கையாளர்கள் கண்டு மகிழலாம், அவற்றுள்:

• நெல் பயிரிடுதல், பாரம்பரிய மல்யுத்தம், பொங்கல் அரிசிதயாரித்தல், தேங்காய் உரித்தல், பூ கட்டுதல், தோரணம்தயாரித்தல் மற்றும் பலப் பாரம்பரிய நடவடிக்கைகள் மற்றும்விளையாட்டுகள் மூலம் ஐந்து நகர இளைஞர்களுக்குச் சவால்விடுத்துப் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் வேர்களைக்கொண்டாடும் ஒரு வேடிக்கையான ரியாலிட்டி விளையாட்டுநிகழ்ச்சி வில்லேஜ் பொங்கல் ரீலோடட் 2.0. ஐந்துஉற்சாகமானக் கிராமத்துப் பெண்கள் அவர்களுக்குஉதவுவார்கள். மேலும் அவர்கள் மின்னியல் சாதனங்கள் மற்றும்நவீன வசதிகள் இல்லாமல் கிராம வாழ்க்கைக்கு ஏற்ப மாறவேண்டும். உள்ளூர் திரைப்படத் தயாரிப்பாளர் ஷஸ்வின் ராஜ்இயக்கியுள்ள இந்த அற்புதமான 5 அத்தியாய ரியாலிட்டிவிளையாட்டு நிகழ்ச்சியில் யுவன்ராஜ் சுப்ரமணியம், அருண்குமரன், ராஜ் குமார் மணி மாறன், கிறிஸ் ஜெய் ஹரிஷ், பவித்ரன் மோகன், மாதுரி ரசமணி, சாரா ஆன் ஜெயராஜன், பெவினாதேவி பேரலகஹன், நிஷாலினி முருகன், லாவண்யாஸ்வேதா பன் மற்றும் கிஷோக் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.ஜனவரி 10 இரவு 9.30மணிக்கு வில்லேஜ் பொங்கல் ரீலோடட்2.0 முதல் ஒளிபரப்புக் காணுகிறது.

• உள்ளூர் திறமையான ரவீன்தாஸ் இயக்கியத் திகில்-நகைச்சுவைத்தொலைக்காட்சித் திரைப்படமான டு.ரி.மி-இல் ஹம்ஷினிபெருமாள், தர்ஷாமினி கேசவன், சுபஸ்ரீ வைரமுத்து, சங்கபாலன், நவின்ஹோ மற்றும் பலப் பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர். ஓர்இரக்கமற்றக் கடன்காரரிடமிருந்து அவளைக் காப்பாற்றக்கூடியத்தனதுக் கொள்ளுத்தாத்தா வதந்திப் பரப்பியப் புதையலைக்கண்டறியக் காலத்தை எதிர்த்துப் போராடும் டுர்காவை இக்கதை பின்தொடர்கிறது.. 

அவளுடையத் தேடல்செல்வத்திற்கு வழிவகுக்குமா அல்லது அழிவுக்கு வழிவகுக்குமா? ஜனவரி 17 இரவு 9.30 மணிக்கு முதல் ஒளிபரப்பாகும் டு.ரி.மி ஐப் பார்த்து, டுர்காவின் தேடலுக்குப் பின்னால் உள்ளஇரகசியங்களைக் கண்டறியவும்!

• அப்க்ளோஸ் அண்ட் பர்சனல் வித் ஸ்ரீனிவாஸ் எனும் அற்புதமானஇசை நிகழ்ச்சியில் புகழ்பெற்ற இந்தியப் பின்னணிப் பாடகர்ஸ்ரீனிவாஸ் இடம்பெறுகிறார்.  மின்சாராப் பூவே, முழுமதி, சொட்டசொட்ட மற்றும் தனதுப் பல ஹிட் பாடல்களை அவர் பாடுகிறார் -ஒவ்வொன்றும் ஏக்கத்தையும் பாராட்டையும் தூண்டும்.புகழ்பெற்ற இந்தியப் பின்னணிப் பாடகருடன் இணைந்துப்பாடும் பிரபல உள்ளூர் கலைஞர்களான அருளினி, ஹெமித்ரா, திவ்யா, குமரேஷ் மற்றும் ஸ்ரீ வித்யா ஆகியோரின் அற்புதமானப்படைப்புகளை உள்ளடக்கிய இந்த நிகழ்ச்சி, இரசிகர்களுக்கு நேசத்துக்குரிய இசை நினைவுகளை மீண்டும் தூண்டும். ஜனவரி18 இரவு 9.00 மணிக்கு க்ளோஸ் அண்ட் பர்சனல் வித்ஸ்ரீனிவாஸ் முதல் ஒளிபரப்புக் காணுகிறது.

 

இந்த ஆண்டுப் பொங்கலின் உற்சாகத்தை ஆஸ்ட்ரோவின் பொங்கல்கொண்டாட்டம் மேலும் கூட்டுகிறது. டெனெஸ் குமார், ஆல்வின்மார்ட்டின், சசி குமார், மூன் நிலா, தாஷா மற்றும் பல உள்ளூர்திறமையாளர்களைச் சந்திக்கும் அறிய வாய்ப்பைப் பெற அனைத்துமலேசியர்களும் அழைக்கப்படுகின்றனர். ஜனவரி 17, 2026 (சனிக்கிழமை) மதியம் 1 மணி முதல் 3 மணி வரை GM Klang-இல் இந்த நிகழ்வுநடைப்பெறும்.

ஆஸ்ட்ரோ ஒன் (Astro One) தொகுப்புகள் இப்போது ரிம49.99*-இலிருந்துக் கிடைக்கும். எளிதான ஸ்ட்ரீமிங், முடிவற்றப்பொழுதுபோக்கு. ஆஸ்ட்ரோ பைபரின் 500எம்.பி.பி.எஸ்-ஐ மாதத்திற்கு ரிம139.99* கட்டணத்தில் பொழுதுபோக்குத்தொகுப்புடன் இணைத்து உங்கள் ஸ்ட்ரீமிங் அனுபவத்தைமேம்படுத்துங்கள். ஆஸ்ட்ரோ ஒன் சந்தாதாரராக அல்லது மேம்படுத்த, www.astro.com.my  அணுகவும் அல்லது 03 9543 3838 எண்ணுக்கு புலனம் செய்தி அனுப்பவும்.

 

மேல் விபரங்களுக்கு www.astro.com.my  எனும் அகப்பக்கத்தைவலம் வாருங்கள்.

RELATED ARTICLES

Most Popular