Wednesday, September 30, 2026
spot_img
HomeMALAYSIACitrawarna Speed Festival 2026: கலை, கலாசாரத்துடன் கார் பந்தய உற்சாகம்

Citrawarna Speed Festival 2026: கலை, கலாசாரத்துடன் கார் பந்தய உற்சாகம்

மலேசியாவின் பாரம்பரிய கலை, கலாசாரம் மற்றும் மோட்டார் விளையாட்டை ஒரே மேடையில் இணைக்கும் Citrawarna Speed Festival 2026 இன்று தொடங்கியது.

செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 4 வரை 12 நாட்கள் நடைபெறும் இவ்விழா IOI City Mall Putrajaya, KLIA Terminal 1 மற்றும் Sama-Sama Hotel KLIA ஆகிய மூன்று முக்கிய இடங்களில் நடைபெறுகிறது.

IOI City Mall-ல் மோட்டார் ஸ்போர்ட்ஸ் Simulator Competition, சுற்றுலா மற்றும் கலாசார தகவல் அரங்குகள், பாரம்பரிய கலை மற்றும் கைவினைப் பொருட்கள், நேரடி கலாசார நிகழ்ச்சிகள், VR அனுபவங்கள் மற்றும் கலாசார நடன நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.

KLIA Terminal 1 மற்றும் Sama-Sama Hotel KLIA-விலும் பாரம்பரிய நடனங்கள், கார் கண்காட்சிகள், Gasing, Congkak போன்ற பாரம்பரிய விளையாட்டுகள் மற்றும் Racing Simulator அனுபவங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

விழாவின் முக்கிய நிகழ்வான Colours of Parade, அக்டோபர் 3ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு IOI City Mall Putrajaya-வில் நடைபெறுகிறது. இதில் சுமார் 1,500 கலாசார கலைஞர்கள் மற்றும் நடனக் கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.

அக்டோபர் 4ஆம் தேதி நடைபெறும் நிறைவு நிகழ்வில் சுமார் 100 Lamborghini உள்ளிட்ட உயர் செயல்திறன் கொண்ட Supercars பங்கேற்கும் சிறப்பு நிகழ்வும் இடம்பெறுகிறது.

Visit Malaysia 2026–2027 பிரசாரத்துடன் இணைந்து நடைபெறும் இந்த விழா, மலேசியாவின் கலை மற்றும் கலாசாரத்தை புதிய அனுபவத்துடன் அறிமுகப்படுத்துவதோடு, சுற்றுலா, சில்லறை விற்பனை, விருந்தோம்பல் மற்றும் படைப்புத் துறைகளுக்கும் ஊக்கமளிக்கும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Citrawarna Speed Festival 2026-ஐ பொதுமக்கள் செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 4 வரை மூன்று இடங்களிலும் பார்வையிடலாம்.

RELATED ARTICLES

Most Popular