Friday, November 27, 2026
spot_img
HomeBusinessலாபுவானின் நீர் விநியோகப் பிரச்சினைக்குத் தீர்வு – RM640 மில்லியன் மதிப்பிலான 19 திட்டங்கள்!

லாபுவானின் நீர் விநியோகப் பிரச்சினைக்குத் தீர்வு – RM640 மில்லியன் மதிப்பிலான 19 திட்டங்கள்!

லாபுவானில் நீர் விநியோகத்தைச் சீரமைத்து, மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் மொத்தம் 640 மில்லியன் ரிங்கிட்டுக்கு நெருக்கமான நிதி ஒதுக்கீட்டில் 19 திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளதாக கூட்டரசுப் பிரதேசங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் ஹான்னா இயோ தெரிவித்துள்ளார்.

13ஆவது மலேசியத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் இத்திட்டங்களில், 133 மில்லியன் ரிங்கிட் செலவிலான ஒன்பது திட்டங்கள் ஏற்கெனவே நிறைவடைந்து, இவ்வாண்டு ஜனவரி மாதம் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

லாபுவானுக்கான சுத்திகரிக்கப்பட்ட நீரில் சுமார் 90 விழுக்காடு சபாவிலிருந்து பெறப்படுவதால், நீர் விநியோகத்தில் ஏற்படும் தடைகள் அங்குள்ள பொதுமக்கள் மட்டுமின்றி வர்த்தகத் துறையினரையும் பாதிப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதற்கிடையே, லாபுவானில் நிரந்தர முதியோர் செயல்பாட்டு மையம் அமைப்பதற்கு 300,000 ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஆறு பள்ளிகளைச் சேர்ந்த 437 மாணவர்களுக்குப் போக்குவரத்து உதவிகளும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நீர் விநியோகக் கட்டமைப்பை மேம்படுத்துவதுடன், சமூக நலன் மற்றும் மாணவர்களின் போக்குவரத்துத் தேவைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

RELATED ARTICLES

Most Popular