
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, சூரியா கேஎல்சிசி குழுமம் தனது மூன்று முக்கிய வணிக வளாகங்களான சூரியா கேஎல்சிசி (Suria KLCC), அலமாண்டா ஷாப்பிங் சென்டர் (Alamanda Shopping Centre) மற்றும் மெஸ்ரா மால் (Mesra Mall) ஆகிய இடங்களில் பிரம்மாண்டமான தீபாவளிக் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

அரச மாளிகை பாணியிலான அலங்காரங்கள், பாரம்பரிய இந்தியக் கலை நிகழ்ச்சிகள், கைவினைப் பயிற்சிகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கான சிறப்புச் சலுகைகள் எனப் பல்வேறு அம்சங்களுடன் அக்டோபர் 23ஆம் தேதி தொடங்கியுள்ள இக்கொண்டாட்டங்கள், நவம்பர் 8ஆம் தேதி கொண்டாடப்படும் தீபாவளியை முன்னிட்டு நடைபெறுகின்றன.
I

சூரியா கேஎல்சிசி – நகரின் மத்தியில் இந்திய அரச மாளிகை!
அக்டோபர் 23 முதல் நவம்பர் 11ஆம் தேதி வரை, சூரியா கேஎல்சிசியின் மைய அரங்கம் பாரம்பரிய இந்திய அரச மாளிகையின் முற்றம் போன்ற பிரம்மாண்டமான தோற்றத்தில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

நுழைவாயிலில் தலா 10 அடி உயரமுள்ள இரண்டு மயில்கள், பிரம்மாண்டமான வளைவு, நீரூற்று அம்சங்களுடன் கூடிய எல்இடி திரை மற்றும் தங்க நிற வேலைப்பாடுகளுடன் கூடிய சிறப்பு மண்டபம் ஆகியவை பார்வையாளர்களைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், நவம்பர் 1, 7 மற்றும் 8ஆம் தேதிகளில் பாரம்பரிய இந்திய நடன நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

அதேபோல், அக்டோபர் 31, நவம்பர் 1, 8 மற்றும் 9ஆம் தேதிகளில் Flaaah நிறுவனத்தின் சார்பில் கோல வடிவ அலங்காரத்தில் சிறப்பு மசாலா சாய் கஸ்டர்ட் டார்ட் தயாரிக்கும் பயிற்சிப் பட்டறை நடைபெறுகிறது. இதில் பங்கேற்பவர்கள் Flaaah கடையில் முழுப் பெட்டி டார்ட்களை வாங்கும்போது 20 விழுக்காடு சிறப்புத் தள்ளுபடியையும் பெறலாம்.

Yves Rocher நிறுவனத்தின் Pleines Natures காகித மலர்க்கொத்து தயாரிக்கும் பயிற்சிப் பட்டறை அக்டோபர் 31, நவம்பர் 1, 7 மற்றும் 8ஆம் தேதிகளில் நடைபெறும். இதில் பங்கேற்பவர்கள் தங்களது சொந்த காகித மலர்க்கொத்தை உருவாக்குவதுடன், நிறுவனத்தின் புதிய வாசனைத் திரவியத்தையும் அறிமுகம் செய்துகொள்ளலாம்.

சூரியா கேஎல்சிசி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான பிரான்சிஸ் டான் கூறுகையில், மலேசியாவில் தீபாவளி என்பது அனைவரையும் வரவேற்று மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளும் பண்டிகையாகும். அந்த உணர்வை வணிக வளாகங்களிலும் உருவாக்கும் நோக்கில், குடும்பத்தினர் ஒன்றுகூடி மகிழவும், பாரம்பரியக் கலை நிகழ்ச்சிகளை ரசிக்கவும், பண்டிகை நினைவுகளைப் பதிவு செய்யவும் ஏற்ற சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
வாடிக்கையாளர்களுக்கான சிறப்புப் பரிசுகள்:
- இரண்டு ரசீதுகளில் மொத்தம் RM1,000 அல்லது அதற்கு மேல் பொருட்கள் வாங்குவோருக்கு RM50 மதிப்பிலான ஷாப்பிங் மின்னணு பற்றுச்சீட்டு வழங்கப்படும். முதல் 300 பேருக்கு மட்டுமே.
- RM1,000 மதிப்பிலான ஷாப்பிங் மின்னணு பற்றுச்சீட்டுகளை வாங்குவோருக்கு கூடுதலாக RM100 பற்றுச்சீட்டு வழங்கப்படும். முதல் 20 பேருக்கு மட்டுமே.
அலமாண்டா ஷாப்பிங் சென்டர் – வண்ணமயமான தீபாவளிக் கொண்டாட்டம்!
புத்ராஜெயாவில் அமைந்துள்ள அலமாண்டா ஷாப்பிங் சென்டரில் அக்டோபர் 23 முதல் நவம்பர் 9ஆம் தேதி வரை தீபாவளிக் கொண்டாட்டம் நடைபெறுகிறது.
வண்ணமயமான கோல அலங்காரங்கள், பாரம்பரிய விளக்குகள் மற்றும் பண்டிகை நுழைவாயில் ஆகியவற்றுடன் வணிக வளாகம் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
மேலும், மனநல விழிப்புணர்வை ஊக்குவிக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் Green Ribbon Pin விற்பனைத் திட்டமும் தொடர்கிறது. ஒரு முள் சின்னத்தின் விலை RM10 ஆகும். இதன் மூலம் திரட்டப்படும் தொகை முழுமையாக மனநல சேவை அமைப்புகளுக்கு வழங்கப்படும்.
சிறப்புப் பரிசுகள்:
- இரண்டு ரசீதுகளில் RM500 அல்லது அதற்கு மேல் செலவிடுவோருக்கு RM30 மதிப்பிலான அலமாண்டா மின்னணு பற்றுச்சீட்டு மற்றும் இரண்டு நறுமண மெழுகுவர்த்திகள் வழங்கப்படும்.
- RM1,500 அல்லது அதற்கு மேல் செலவிடுவோருக்கு RM80 மதிப்பிலான பற்றுச்சீட்டுகள் மற்றும் இரண்டு நறுமண மெழுகுவர்த்திகள் வழங்கப்படும்.
மெஸ்ரா மால் – கிழக்குக் கரையிலும் தீபாவளி வரவேற்பு!
தெரெங்கானு, கெமாசிக்கில் அமைந்துள்ள மெஸ்ரா மாலில் நவம்பர் 1 முதல் 10ஆம் தேதி வரை தீபாவளிக் கொண்டாட்டம் நடைபெறவுள்ளது.
வாடிக்கையாளர் சேவை மையப் பகுதி இந்திய அரச மாளிகையின் முற்றத்தை நினைவூட்டும் வகையில் பாரம்பரிய அலங்காரங்கள், மலர் அமைப்புகள், வண்ணமயமான அலங்காரங்கள் மற்றும் ஒளி விளக்குகளுடன் அழகுபடுத்தப்படவுள்ளது.
மேலும், இரண்டு ரசீதுகளில் RM350 அல்லது அதற்கு மேல் பொருட்கள் வாங்கும் முதல் 100 வாடிக்கையாளர்களுக்கு RM30 மதிப்பிலான மெஸ்ரா மால் ஷாப்பிங் பற்றுச்சீட்டு வழங்கப்படும்.
மூன்று வணிக வளாகங்களிலும் நடைபெறும் இக்கொண்டாட்டங்கள், மலேசியாவின் பன்முகக் கலாசாரத்தையும் தீபாவளியின் மகிழ்ச்சி, ஒற்றுமை மற்றும் விருந்தோம்பல் உணர்வையும் உள்ளூர் மக்களுக்கும் வெளிநாட்டுப் பார்வையாளர்களுக்கும் அறிமுகப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.


