Sunday, November 22, 2026
spot_img
HomeBusinessமருத்துவ நாயகர்களுக்கு பிரிக்ஃபீல்ட்ஸ் “டீ கடையில்” பாராட்டு விழா!

மருத்துவ நாயகர்களுக்கு பிரிக்ஃபீல்ட்ஸ் “டீ கடையில்” பாராட்டு விழா!

கோலாலம்பூர்: பொதுமக்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் மருத்துவர்களையும், சுகாதாரப் பணியாளர்களையும் கௌரவிக்கும் வகையில் பிரிக்ஃபீல்ட்ஸில் சிறப்பு பாராட்டு நிகழ்வு நடைபெற்றது.

பிரிக்ஃபீல்ட்ஸ் பகுதியில் உள்ள Tea Kadai உணவகத்தில் அதன் உரிமையாளர் ரிட்ஸ்வான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கோலாலம்பூர் மருத்துவமனையின் (HKL) டாக்டர் அலன் ரவி ராஜகோபால், டாக்டர் அசிஸ் சப்பீர் ஹுசைன் மற்றும் அவர்களுடன் பணியாற்றும் அர்ப்பணிப்புமிக்க மருத்துவக் குழுவினர் கௌரவிக்கப்பட்டனர்.

Tea Kadai Brickfields ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் பாராட்டு நிகழ்வில், உள்ளூர் சமூகத்தினர் ஒன்றிணைந்து மருத்துவக் குழுவினரின் சேவைகளைப் பாராட்டினர்.

உயிர்களைக் காப்பாற்றுவதில் தங்களது கடமையைத் தாண்டி அர்ப்பணிப்புடனும், மனிதநேயத்துடனும் செயல்பட்ட மருத்துவக் குழுவினரின் தன்னலமற்ற சேவையை அங்கீகரிக்கும் வகையில் தேநீர் விருந்துடன் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

மருத்துவத் துறையில் பணியாற்றும் முன்களப் பணியாளர்களின் தியாகம், துணிச்சல், கருணை மற்றும் அர்ப்பணிப்பை நினைவுகூரும் வகையில் இந்நிகழ்வு அமைந்தது.

சமூகத்தின் நலனுக்காக அயராது உழைக்கும் மருத்துவ நாயகர்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன், அவர்களின் சேவையை மதித்து கௌரவிப்பது அனைவரின் கடமையாகும்.

RELATED ARTICLES

Most Popular