Sunday, November 22, 2026
spot_img
HomeBusinessசிலாங்கூர் மாநில அளவிலான தீபாவளி கொண்டாட்டம் – 2026: கோலாகலமாக நடைபெற்றது!

சிலாங்கூர் மாநில அளவிலான தீபாவளி கொண்டாட்டம் – 2026: கோலாகலமாக நடைபெற்றது!

சிலாங்கூர் மாநில அளவிலான தீபாவளி கொண்டாட்டம் 2026, கிள்ளான் டத்தாரான் கிள்ளான் (Dataran Klang) @ பாடாங் செட்டி மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியைச் சிலாங்கூர் மாநில முதலமைச்சர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

“ஒற்றுமையின் ஒளி, வளமான சிலாங்கூர்” (Cahaya Perpaduan, Selangor Sejahtera) என்ற கருப்பொருளில் நடைபெற்ற இக்கொண்டாட்டம், பல இனங்கள் மற்றும் பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களிடையே ஒற்றுமை, பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டது.

சிலாங்கூர் மாநிலத்தில் வாழும் இந்தியச் சமூகத்தினரும் மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்றத்தின் பலன்களைச் சமமாகப் பெற்றிட மாநில அரசு தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்பாக, கல்வி, சமூக நலன், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவோர் மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் இந்தியச் சமூகத்தினருக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதில் மாநில அரசு கவனம் செலுத்தி வருகிறது.

ஒவ்வொரு குடும்பம், சமூகத்தினர் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் மாநிலத்தின் வளர்ச்சிப் பயன்களை அனுபவிப்பதே சிலாங்கூரின் உண்மையான முன்னேற்றம் என்றும் இந்நிகழ்வின் மூலம் வலியுறுத்தப்பட்டது.

தீபாவளி என்பது ஒளி இருளை வெல்லும் நன்னாளாக மட்டுமல்லாமல், சமூக நல்லிணக்கம், அன்பு மற்றும் ஒற்றுமையைப் போற்றும் விழாவாகவும் திகழ்கிறது.

இந்நிலையில், சிலாங்கூர் மாநில அளவில் நடைபெற்ற இக்கொண்டாட்டம் பல இன மக்களிடையே ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் மேலும் வலுப்படுத்தும் நிகழ்வாக அமைந்தது.

RELATED ARTICLES

Most Popular