Friday, November 20, 2026
spot_img
HomeBusinessசெகாமாட் அறிவியல் இடைநிலைப் பள்ளி மாணவர்களின் வசதிக்காக RM100,000 நிதி ஒதுக்கீடு!

செகாமாட் அறிவியல் இடைநிலைப் பள்ளி மாணவர்களின் வசதிக்காக RM100,000 நிதி ஒதுக்கீடு!

செகாமாட் அறிவியல் இடைநிலைப் பள்ளி (SESS) மாணவர்களின் வசதியை மேம்படுத்தும் நோக்கில், அப்பள்ளியின் அவுலியா இல்திஸாம் மண்டபம் மற்றும் அன்-நகி தொழுகை மண்டபத்தில் குளிரூட்டிகள் பொருத்துவதற்காக RM100,000 நிதி வழங்கப்பட்டுள்ளது.

செகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் யூனேஸ்வரன் ராமராஜின் ஒதுக்கீட்டின் கீழ், செகாமாட் நாடாளுமன்ற அலுவலகம் இந்த நிதியுதவியை வழங்கியுள்ளது.

இந்த நிதியுதவியின் மூலம் மாணவர்கள் கல்வி நடவடிக்கைகள் மற்றும் ஆன்மிகச் செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கு வசதியான, அமைதியான மற்றும் சிறந்த சூழலை உருவாக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிதி ஒப்படைப்பு நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய பள்ளியின் முதல்வர் சஹ்னிசாம், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் (YDP) சுரைஷாஸ்மான், மாணவர் நல விவகாரங்களுக்கான துணை முதல்வர் அசிசான் மற்றும் தலைமை எழுத்தர் மஹேரான் ஆகியோருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

“மாணவர்களின் நலனே எங்களது முன்னுரிமை” என்ற அடிப்படையில், மாணவர்களுக்குச் சிறந்த கல்விச் சூழலை ஏற்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Most Popular