Saturday, November 21, 2026
spot_img
HomeBusinessHRD Corp, MEF இணைந்து 105 நிறுவன முதலாளிகளுடன் தொழிலாளர் திறன் மேம்பாட்டுக்குப் புதிய திட்டம்

HRD Corp, MEF இணைந்து 105 நிறுவன முதலாளிகளுடன் தொழிலாளர் திறன் மேம்பாட்டுக்குப் புதிய திட்டம்

மலேசியாவின் எதிர்காலத் தொழிலாளர் திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்புச் சந்தையின் தேவைகளை வலுப்படுத்தும் நோக்கில், மனிதவள மேம்பாட்டுக் கழகம் (HRD Corp) மற்றும் மலேசிய முதலாளிகள் கூட்டமைப்பு (MEF) இணைந்து 105 நிறுவன முதலாளிகளை ஒன்றுதிரட்டின.

‘Dari Dasar Ke Majikan’ (கொள்கையிலிருந்து முதலாளிகள் வரை) என்ற கருப்பொருளில் நடைபெற்ற HRD Corp Pocket Talk நிகழ்ச்சியில் பல்வேறு தொழில்துறைகளைச் சேர்ந்த பெரிய நிறுவனங்கள், பொது பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் மற்றும் சிறு, நடுத்தர நிறுவனங்களின் (SME) பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இதில் பேசிய HRD Corp தலைமைச் செயல் அதிகாரி டத்தோ ஷமிர் அசிஸ், முதலாளிகளிடமிருந்து பெறப்படும் பயிற்சி வரி நிதி பொறுப்புடனும் வெளிப்படைத்தன்மையுடனும் நிர்வகிக்கப்படுவதுடன், தரமான மற்றும் தொழில்துறைக்குப் பொருத்தமான பயிற்சிகளுக்கு பயன்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துவதே தங்களது முக்கிய நோக்கம் என்றார்.

மேலும், பயிற்சி மானிய விண்ணப்பங்களைப் பயிற்சி தொடங்குவதற்கு குறைந்தது 14 நாட்களுக்கு முன்னதாகச் சமர்ப்பிக்க வேண்டும் என்ற புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதுவரை 26,000-க்கும் மேற்பட்ட பயிற்சி அமர்வுகள் சரிபார்க்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், MEF தலைவர் டுவான் ஹாஜி நிக் முஸ்தபா நிக் முகமட், தொழிலாளர் பயிற்சியை நிர்வாக நடைமுறையாக மட்டும் கருதாமல், நிறுவனங்களின் எதிர்கால வளர்ச்சிக்கான நீண்டகால முதலீடாக முதலாளிகள் அணுக வேண்டும் என வலியுறுத்தினார்.

30,000-க்கும் மேற்பட்ட முதலாளிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் MEF உடனான இந்த ஒத்துழைப்பு, மலேசியத் தொழிலாளர்களின் திறன் இடைவெளியைக் குறைத்து, மாறிவரும் தொழில்நுட்ப மற்றும் பொருளாதாரச் சூழலுக்கு ஏற்ப திறமையான, போட்டித்தன்மை மிக்க பணியாளர்களை உருவாக்குவதற்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதாரம்: HRD Corp.

#HRDCorp #MEF #WorkforceDevelopment #Malaysia #TravelWithATM

RELATED ARTICLES

Most Popular