Sunday, November 22, 2026
spot_img
HomeBusinessசிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு RM90 மில்லியன் முதலீட்டு நிதி!

சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு RM90 மில்லியன் முதலீட்டு நிதி!

மலேசியாவின் சிறு, நடுத்தர நிறுவனங்களின் (SME) வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில், குறைந்தபட்சம் RM90 மில்லியன் மதிப்பிலான முதலீட்டு நிதி வழங்கப்படவுள்ளது.

தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்டீவன் சிம் இதனைத் தெரிவித்தார்.

எஸ்எம்இ கோர்ப் நிறுவனத்தின் 30ஆவது ஆண்டு விழா மற்றும் முதலீட்டுத் திட்டத் தொடக்க நிகழ்ச்சியில் பேசிய அவர், இத்திட்டத்தின் கீழ் எஸ்எம்இ கோர்ப் RM45 மில்லியன் வழங்கும் என்றும், OSK, ஹர்தாமோடல் மற்றும் பெர்னாஸ் ஆகிய மூன்று நிறுவனங்களின் பங்களிப்புடன் மொத்த நிதி குறைந்தபட்சம் RM90 மில்லியனாக உயர்த்தப்படும் என்றும் கூறினார்.

இந்த நிதி, அதிக வளர்ச்சி வாய்ப்புள்ள துறைகளில் செயல்படும் சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடனுதவி மற்றும் பங்குமூலதன முதலீடு மூலம் வழங்கப்படும்.

மேலும், எஸ்எம்இ கோர்ப் தனது புதிய அலுவலகத்திற்கு இடம் மாறியதன் மூலம் ஆண்டுக்கு RM17 மில்லியன் செலவைச் சேமிக்க முடியும் என்றும், நிறுவனங்களின் நிதி மற்றும் பணப்புழக்கப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண SCALE திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

RELATED ARTICLES

Most Popular